கண்டிப்பாக பார்க்க வேண்டியவை
தேனி மாவட்டத்தின் பெரிய குளத்தில் உள்ள பாலசுப்ரமணியர் கோவில், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். முருகப் பெருமானுக்கான இந்த கோவிலை கட்டியவர் வலிமை மிகுந்த சோழ மன்னரான ராஜேந்திர சோழராவார்.ஆறு முகங்களையுடைய முருகப் பெருமான், தன்னுடைய துணைவியாருடன் இந்த கோவிலில் காட்சியளிக்கிறார். இந்த முருகப்பெருமானின் சிலையானது பூமியைத் துளைத்து கட்டப்பட்டிருக்கிறது.
2000 ஆண்டுகள் பழமையான கோவிலாக கருதப்படும் பாலசுப்பரமணியர் கோவில் தமிழ் நாட்டில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக உள்ளது.
இந்த கோவில் வராக நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது. ஒருமுறை ராஜேந்திர சோழ மன்னர், ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த போது அதனை தேவையில்லாமல் கொன்று விட்டதாகவும், பின்னர் அந்த பன்றியின் குட்டிகளுக்கு முருகப் பெருமான் பாலூட்டிக் கொண்டிருந்ததை ராஜேந்திர சோழர் காண நேரிட்டதாகவும், அதையொட்டியே தனது தவறை உணர்ந்த ராஜேந்திரர் அதே இடத்தில் முருகனுக்கு கோவில் ஒன்றை கட்ட உத்தரவிட்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த கதை அப்படியே கற்சிற்பங்களாக இக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளது. பாலசுப்ரமணிய கடவுளின் இந்த கோவில் வடநாட்டின் காசி கோவிலையொத்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment