- மேலும்
தமிழ் நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும், மிகவும் இளமையானதுமான மாவட்டம் தேனி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் இந்த தேனி மாவட்டம் விடுமுறைக் காலங்களை கழிக்க மிகவும் ஏற்ற இடமாகும்.
Image source: commons.wikimedia.org
பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய முக்கிய இடங்களை உள்ளடக்கிய இந்த புதிய மாநகரம் அதன் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளுக்காக மிகவும் பொருள் பெற்றது.
நீங்கள் தேனியில் இருக்கும் போது மென்மையான துண்டுகள், ருசியான மாம்பழங்கள், அருமையான பருத்தித் துணிகள், மனம் கமழும் ஏலக்காய், காரமான மிளகாய்கள், புத்துணர்வூட்டும் காப்பிக் கொட்டைகள் மற்றும் ஆரோக்கியான கிரீன் டீ ஆகியவற்றை வாங்கவோ, அனுபவிக்கவோ மறந்து விடாதீர்கள்.
தேனி மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள்
தேனியில் வைகை அணைக்கட்டு, சோத்துப்பாறை அணைக்கட்டு மற்றும் சண்முகா நதி அணைக்கட்டு ஆகிய புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. மேலும் சுருளி நீர்வீழ்ச்சி,கும்பக்கரை நீர்வீழ்ச்சி மற்றும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சி ஆகிய அற்புதமான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளின் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன.
தேனியில் பல்வேறு கோவில்களும், புனிதத் தலங்களும் இருப்பதால் புனிதப் பயணம் செல்பவர்களுக்கும் மிகவும் விருப்பமான சுற்றுலாதலமாக தேனி இருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் குச்சானூர், தீர்த்த தொட்டி, கௌமாரியம்மன் கோவில், தேவதானபட்டி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாலசுப்ரமணியர் கோவில் ஆகிய இடங்களில் வழிபட்டு செல்வார்கள். மேகமலைப் பகுதிகள், போடி மெட்டு மற்றும் பரவச உலகம் தீம் பார்க் ஆகியவை இங்குள்ள பிற பார்வையிடங்களாகும்.
தேனியின் திருவிழாக்காளும், கண்காட்சிகளும்
தேனி மாவட்டத்தில் பொங்கல், சிவராத்திரி மற்றும் மாசிமகம் ஆகிய பண்டிகைகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்த திருவிழாக் காலங்களில் தேனியில் நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
தேனிக்கு சுற்றுலா வர சிறந்த பருவம்
தேனிக்கு வருடம் முழுவதும் வந்து செல்ல முடியுமென்றாலும், திருவிழாக்காலங்களில் வந்து செல்வதற்கு நீங்கள் திட்டமிட்டால் அது பலனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த காலகட்டங்களில் வெப்பநிலை குளிர்சியானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருப்பதால், சூரியனின் சுட்டெரிக்கும் வெய்யிலை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.
தேனியை அடையும் வழிகள்
தேனி நகரம் பிற முக்கிய நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் பாதைகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தேனிக்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையம் மதுரை விமான நிலையமாகும்.
No comments:
Post a Comment