Pages

Saturday, 9 November 2013

ஒழுக்கமின்றி படிக்கும் மாணவர்கள் ஒரு வித தவறான ஹீரோ இமேஜ் உருவாக்கி கொள்கிறார்கள்

ஒழுக்கமின்றி படிக்கும் மாணவர்கள் ஒரு வித தவறான ஹீரோ இமேஜ் உருவாக்கி கொள்கிறார்கள்,மேலும்...


Wednesday, 6 November 2013

வல்லவனுக்கு வல்லவன் வல்லபாய்

தற்போது நாட்டில் 28 மாநிலங்கள்,7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இது, இவர் இல்லையென்றால் இருந்திருக்காது. சிதறுண்டு கிடந்தஇந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு
வந்தவர். அவர் தான் இந்தியாவின் "இரும்பு மனிதர்' என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல். இன்று இவரது பிறந்ததினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக், 31ல் படேல் பிறந்தார்.22வது வயதில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக, வேலை பார்த்து பணம் சேர்த்தார். "பாரிஸ்டர்' பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார். வறுமை காரணமாக கல்லூரியில் உடன் படித்த மாணவர்களின் புத்தகங்களை கடன் வாங்கி படித்து, இரண்டே ஆண்டுகளில் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். 

சுதந்திர போராட்டத்தில்:

படேல் வழக்கறிஞராக பல போராட்டங்களில் ஈடுபட்டார். பின் காங்.,கட்சியில் இணைந்து, சுதந்திரபோராட்டத்தில் களமிறங்கினார். காந்திஜியின் உப்பு சத்யாகிரக போரட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது.இதனால் சிறை சென்றார்.காந்திஜி கொண்டு வந்த ஒத்துழையாமை இயக்கத்தின் படி, வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததுடன், மகன், மகள் வைத்திருந்த வெளிநாட்டு ஆடைகளையும் தூக்கி எறிந்தார். 1931ல் கராச்சியில் நடந்த மாநாட்டில் காங்., கட்சி தலைவரானார். 1942, ஆக.,9ல், வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். உடல்நலன் மோசமாக இருந்த போதும், போராட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக மீண்டும் சிறையில்அடைக்கப்பட்ட இவர், 1945 ஜூன் 15ல்விடுதலையானார். 

1946 காங்., கட்சி தலைவர்: :

தேர்தலில், காந்திஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேருவுக்கு வழி விட்டு, வல்லபாய் படேல் ஒதுங்கினார். 

"ஒரே இந்தியா' எப்படி சாத்தியம்:

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நாடு 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய அரசுக்கு சவாலாக இருந்தது. இப்பொறுப்பு உள்துறை அமைச்சராக இருந்தபடேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமும் இணைக்கப்பட்டன. படேலின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது.

போர்க்கொடிக்கு பதிலடி:

காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. ""இந்தியாவுடன் இணைந்து விடுங்கள்'' என்ற படேல், மவுன்பேட்டன் கோரிக்கையை, ஐதராபாத்தை ஆட்சி செய்த, முஸ்லிம் மன்னர் நிஜாம் நிராகரித்தார், மேலும் இந்தியாவுக்கு எதிராக"தனி படையை' திரட்டினார். நிஜாமுக்கு பாடம் கற்பிக்க படேல் முடிவு செய்தார். "ஆப்பரேஷன் போலோ' என்ற ராணுவ நடவடிக்கையை 1948, செப்.13ம் நாள் துவக்கினார். ராணுவம் நுழைந்த மூன்றே நாட்களில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின் ஐதராபாத் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

"கடமை முக்கியம்':

படேல் வழக்கறிஞராக இருக்கும் போது, ஒரு நபருக்காக கோர்ட்டில்வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது படேலுக்கு ஒரு தந்தி வந்தது. அதை பார்த்த பின், பைக்குள் வைத்துவிட்டு வழக்கு விசாரணையை தொடர்ந்தார். விசாரணை முடிந்த பின், உடன் இருந்தவர்கள் படேலிடம், ""உங்களுக்கு ஒரு தந்தி வந்ததே. என்ன விஷயம்'' என கேட்டனர். அதற்கு படேல், ""என் மனைவி இறந்து விட்டார்'' என பதில் அளித்தார். ""ஏன் நீங்கள் உடனே செல்லவில்லை'' என வருத்தத்துடன் அவர்கள் கேட்டனர். அதற்கு படேல், ""என் மனைவி இனிமீண்டும் வரப் போவதில்லை. ஆனால் குற்றமற்ற ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியமாகப்பட்டது,'' எனபதிலளித்தார். இதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் நெகிழ்ந்து போயினர். எந்த அளவு அவர் கடமை தவறாமல் இருந்தார் என்பதற்கு இது உதாரணம்.

இரும்பு மனிதர் ஆனது எப்படி:

குஜராத்தின் தென்மேற்குப்பகுதியில் இருந்த ஜூனாகாத், பாகிஸ்தானுடன் இணைய விரும்பியது. பூகோளஅடிப்படையில் அது இந்தியாவுடன் இணைவது தான்நியாயம் என மவுண்ட்பேட்டன் தெரிவித்தார்.இதற்கு ஜூனாகத் அரசர் மறுக்கவே, படேலுக்கு கோபம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் இருந்த சிறு ராணுவத்தை அனுப்பி, அதிரடியாகஜூனாகத்தை இணைத்தார். எல்லையோரம் இருந்த ஜோத்பூர், ஜெய்சல்மர் ஆகியவை பாகிஸ்தானுடன் இணைய "கொல்லைப்புறம்' வழியாக பேச்சு நடத்திக் கொண்டிருந்தன. விடுவாரா படேல், அப்பகுதி மக்கள் விருப்பப்படி, அவற்றையும் இந்தியாவுடன் இணைத்தார். காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். ஆட்சி செய்த மன்னர் இந்து.எங்கு இணைந்தாலும் பிரச்னை எனக் கருதி தனியாக செயல்பட விரும்பினார். இதற்கிடையே காஷ்மீர் பழங்குடியினருக்கு, ஆயுதங்கள் வழங்கி மன்னருக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டியது பாக்., இதையடுத்து மன்னர்,இந்திய உதவியைக் கேட்க, படேல் படைகளைஅனுப்பினார். அங்கு இந்திய படைகளுக்கும் பாக்., படைகளுக்கும் போர் ஏற்பட்டது.தீரமிக்க படேல் அமைச்சராக இருந்ததால், இந்திய ராணுவம் அபார வெற்றி பெற்று,காஷ்மீரையும் இந்தியா உடன் இணைத்தது. அப்போது, காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு பாக்., வசம் இருந்தது.இன்றளவும் இப்பகுதி "ஆசாத் காஷ்மீர்' என்ற பெயரில் பாக்., வசம் இருக்கிறது. பல சமஸ்தானங்களை இணைத்து, ஒரே இந்தியாஉருவாக காரணமாக இருந்ததால், படேல், "இரும்பு மனிதர்' என பெயர் பெற்றார்.