பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - நீர்
#நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜனின் எடை இயைபு விகிதம் - 1:8
# நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கன அளவு இயைபு விகிதம் - 2:1
# நீர் மூலக்கூறில் வேதியியல் பெயர் - ஹைட்ரஜன் மோனாக்சைடு
அல்லதுஆக்சிஜன் ஹைட்ரைடு.
# நீரின் கன அளவு இயைபை கண்டறியும் சோதனையின் பெயர் - ஹாப்மன் முறை
# நீரின் கன அளவு இயைபைக் கண்டறிய உதவும் உபகரணத்தின் பெயர் - ஹாப்மன்
வோல்டா மீட்டர்
# ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை - 0 டிகிரி செல்சியஸ்
# ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் கொதிநிலை - 100 டிகிரி
செல்சியஸ
# தூய நீர் மின்னோட்டத்தைக் கடத்துமா - கடத்தாது
# பனிக்கட்டி நீரில் மிதக்கக் காரணம் - 0 டிகிரி செல்சியசில்
ஒருகுறிப்பிட்ட நிறையை உடைய பனிக்கட்டியின் பருமன் அதே நிறையை உடைய நீரின் பருமனை
விட அதிகம்.
# கடல்நீரில் உப்பின் சதவீதம் - 3.5 சதவீதம்
# கடல் நீரில் அதிகமாகக் காணப்படுவது - சோடியம் குளோரைடு (2.8
சதவீதம்)
# கடல்நீரிலிருந்து உப்புக்கள் எந்த முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது
- ஆவியாதல் முறையின் மூலம்
# அயோடின் பற்றாக்குறையால் உருவாகும் நோய் - முன் கழுத்து கழலை
# கடல் நீரிலிருந்து தூய நீர் எந்த முறையின் மூலம் பெறப்படுகிறது -
எதிர் சவ்வூடு பரவல் முறை
# நீரேற்று நிலையங்களில் நீரில் உள்ள கசடுகளை வீழ்படிவாக்குவதற்காக
நீருடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் - பொட்டாஷ் படிகாரம் மற்றும் சுண்ணாம்ப
# நீரின் மிகப்பெரிய இயற்கை ஆதாரம் - கடல்
# நீரின் அடர்த்தி அதன் பருமனுக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.
# ஹாப்மன் வோல்டா மீட்டரில் நீரை மின்னாற்பகுக்க எதிர்மின்வாயில்
ஹைட்ரஜன் வாயும், நேர் மின்வாயில் ஆக்சிஜன் வாயுவும் சேகரமாகும்.
# நீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆனது என்று
கண்டறிந்தவர் - ஏ.எல்.லவாய்சியர் (1783)
# இரு கன அளவு ஹைட்ரஜனும், ஒரு கன அளவு ஆக்சிஜனும் சேர்ந்த கலவையை
எரி்த்து நீரைத் தயாரித்தவர் - ஹென்றி காவண்டிஷ் (1781)
# உள்ளுறை வெப்பத்தின் அலகு - கலோரி/கிராம்
# நுண்ணுயிரிக் கொல்லியாகப் பயன்படுவது - சலவைத் தூள்
# உறையும்போது கன அளவு அதிகரிக்கும் பொருள் - நீர்
# இந்தியாவில் நீர் மாசுபாடு அடைந்திருப்பதன் சதவீதம் - 70 சதவீதம்.
# அமிலம் கலந்த நீரை மின்னாற்பகுக்கும்போது ஹைட்ரஜனும்,ஆக்சிஜனும்
கிடைக்கிறது.
# நீரின் மூன்று நிலைகள் - திட, திரவ, வாயு
# 4 டிகிரி செல்சியத்தில் நீரின் அடர்த்தி 1 கிராம்/கன சென்டிமீட்டர்
என்றால் பனிக்கட்டியின் அடர்த்தி - 0.91 கிராம்/கன சென்மீட்டர்
# தண்ணீரைப் பற்றியும் அதன் விரவலைப் பற்றியும் படிக்கும் அறிவியல்
பிரிவு - நீரியல் (ஹைட்ராலஜி)
# தொழிற்சாலைக் கழிவுகளில் உள்ள கரிம மாசுக்களை காற்றில் உள்ள
பாக்டீரியாக்களைக் கொண்டு சிதைந்த பின்னரே அக்கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.
No comments:
Post a Comment