கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு
தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும்
தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி. தனது மாணவர் பருவத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கல்வியில் நாட்டம் காட்டவில்லை.
இருப்பினும் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள், தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.தனது இளமை பருவத்தில், வட்டார மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் மறுமலர்ச்சி
அமைப்பைக் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்திற்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர் கழகம்" என்ற அமைப்பாக உருவாக்கி அதன்மூலம் மொழிபற்றையும் இனமான உணர்வை ஊட்டியவர் நம் தலைவர் கலைஞர்.
தலைவர் கலைஞர் அவர்கள் திருக்குவளை தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார். அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார்.
தலைவர் கலைஞர் அவர்களின் முதல் போராட்டம்
1936 திருவாரூர் உயர்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார் மறுத்தார். இடம் தரவில்லையெனில் எதிரேயுள்ள தெப்பக் குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று கூறியது மட்டுமின்றி, அவ்வாறு குதிக்கவும் முனைந்தார். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு 5-ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க இசைவு அளிக்கப்பட்டது.
முதல் போராட்டத்தின் வெற்றி இது.
பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி
1938 இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரம். நாள்தோறும் மாணவர்களைக் கூட்டி, கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார். இதுவே தலைவர் கலைஞர் பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி எனலாம்.
முதல் சொற்பொழிவு
1939 பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் “நட்பு” என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம் தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசுலித்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்.
முதல் அமைப்பு
19.4.1940 மாணவர் ஒற்றுமைக்கென "தமிழ்நாடு" "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்கிற தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார்.
1941 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் நாட்டில் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.
முதல் பத்தரிக்கை
1941 மாணவர்களிடையே எழுத்தாற்றலைச் சிறப்பாக வளர்க்க “மாணவநேசன்” என்ற மாத இதழைக் கையெழுத்து ஏடாகத் தொடங்கி நடத்தினார்.
முதல் விழா
1942 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அன்றைய மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்ப பிற்காலத்தில் உணர்ச்சிக் கவிதையாக வரலாற்றுப் புகழ் பெற்று அமைந்தது.
இந்நிகழ்ச்சியின் போது நிதிப் பற்றாக்குறைக்காக தமது கைச்சங்கிலியை அடகு வைத்துச் சமாளித்தார்.
முதல் கட்டுரை
1942 பேரறிஞர் அண்ணா நடத்திய “திராவிட நாடு” மூன்றாவது இதழில் “இளமைப் பலி” என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைதந்த அறிஞர் அண்ணா அவர்கள் “இளமைப்பலி” கட்டுரை எழுதிய இளைஞர் மு.கருணாநிதியை சந்திக்க விரும்பி, அவரை அழைத்து வரச் செய்து நோரில் சந்தித்து தலைவர் கலைஞரின் எழுத்தாற்றலைப் பாராட்டினார்.
அத்துடன் படிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்டச் சொன்னார். அண்ணாவின் அறிவுரைகளில் தலைவர் கலைஞர் செயல்படுத்தாமல் விட்டது இது ஒன்றுதான். இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கி “முரசொலியை” மாத இதழாக 10.08.1942ல் வெளியிட்டார். அதில் “சேரன்” என்ற புனைப் பெயரால் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.
முதல் நாடகம்
28.5.1944 திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் ‘பழனியப்பன்’ என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் தலைவர் கலைஞாரின் முரசொலி ஏடு கண்டு மகிழ்ந்த மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆவேசமாகப் பேசத்
தொடங்கினார். திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தியதோடு அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார்.
திருமணம்
11.11.44 அன்று பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் விசயராகவலு தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.
கலைஞர் மீது நடந்த முதல் தாக்குதல்
புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது காங்கிரசார் கலைஞைரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்து விட்டவரை இறந்துவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முகமதியர் போன்று மாறு வேடமணிந்து பொயாரைச் சந்தித்தார்.
பெரியார் தலைவர் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தன்னுடன் அழைத்துச் சென்று “குடிஅரசு” வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.
முதல் கொடி அமைப்பு
19.4.1946 திராவிடர் கழகக் கொடிக்கு மாதிhp அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்தைக் குறிக்க, தன் கைவிரலை அறுத்து இரத்தத்தை பதித்தார். முதன் முதலாக தன் குருதியை கொடிக்குக் காணிக்கையாக்கினார். கோவை ஜுபிடர் நிறுவனத்திற்கு கலைப் பணிபுரிய பெரியாரிடம் விடை பெற்றுச் சென்றார்.
தந்தை மறைவின் போது
19.4.1946 தம் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது மருத்துவரை அழைக்க தலைவர் கலைஞர் சென்றார். அப்போது அந்த மருத்துவர், சித்த வைத்தியர்கள் மாநாட்டினை தலைமையேற்று நடத்திக் கொண்டு இருந்தார். அங்கு வந்த தலைவர் கலைஞரை கண்டதும் மாநாட்டில் உடனே அவரை உரையாற்றிட அறிவித்து விட்டார். தலைவர் கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நண்பர் தென்னன், தந்தையின் மரணச்
செய்தியோடு வந்தார்.
முரசொலி வார இதழை வெளியிட்டார்.
1947 இந்தியாவுக்குச் சுந்திரம் கிடைத்ததைப் பெரியார் தமிழர்களுக்குத் துக்க நாள் என்றார். அண்ணா “அது திராவிடர்களுக்குத் திருநாள்” என்று குறிப்பிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைய, பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாலம் அமைக்க முரசொலியில் ‘கடைசி நாட்கள்’ என்ற கட்டுரையைக் தலைவர் கலைஞர் வடித்தார்.
துணைவியாரின் மறைவின் போதும்...
1948 துணைவியார் பத்மாவதி அவர்கள் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் இயக்கத் தோழர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் தலைவர் கலைஞர் புதுக்கோட்டைக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து லாரியில் ஊர் திரும்புவதற்குள் தலைவர் கலைஞரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்.
திருமண நாளிலும்...
1948 தயாளு அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதே நாளில் திருமணத்திற்கு சற்று முன்பு, மணமகன் கோலத்தில் இருந்தபோதும், அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் நம் தலைவர் கலைஞர்.
தி.மு.க தொடக்கம்.
17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. நம் தலைவர் கலைஞர் அதன் தோற்றுநர்களுள் ஒருவர் ஆவர். 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும.1967ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுபணிதுறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும் அறிஞர் அண்ணா மறைந்த பின் அவரது இதயத்தை இரவல் வாங்கிக் கொண்டு, சோதனைகள் நிறைந்த கால கட்டத்தில் முதல்வர் பொறுப்பினையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினையும் ஏற்று, கழகத்தையும், கழகம் மேற்கொண்ட கடமைகளையும் காப்பாற்றிய பெருமையானது தலைவர் கலைஞருக்கு மட்டுமே உரிமையானது கழகம் பிளவுபட்ட காரிருள் வேளைகளிலும் கதிரவனாய் முன் நின்று தி.மு கழகத்தை காப்பவர் நம் தலைவர் கலைஞர்.
தலைவரின் வரலாற்றில்....
தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006
நின்றார்! வென்றார்!
தமிழ்நாடு சட்டப் பேரவைக்குக் கீழ்க்காணும் தொகுதிகளில் போட்டியிட்டுத் தலைவர் கலைஞர் பெரு வெற்றி பெற்றார்.
குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் - மேலவையில் 53 ஆண்டுகளாகப் பதவி வகிப்பவர். 1957 – லிருந்து 2006 வரை போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிச் சரித்திரம் படைத்தவர், படைத்துக் கொண்ட வருபவர்.
உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள்
தமிழகம் முதல் இடத்தில்
* இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்,
* உயர் சிகிச்சைக்கான உயிர் காக்கும் கலைஞர் காப்பிட்டு திட்டம்,
* முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம்,
* மாற்று திறனாளிகளுக்கு அரசில் வேலை, வேலைக்கு சென்றுவர மூன்று சக்கர வாகனமும் இலவசம்.
* விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.
*குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்குமாடி வீடுகள் அமைத்து அவர்களைக் குடியேற்றினார்.
* தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும், இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார்.
* இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் கீர்திருத்தி அமைத்தார்.
* பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.1,00,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் தொகை வழங்கும் முறையைத் தொடங்கி வைத்தார்.
* தனியார் பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கி சேர, சோழ, பாண்டியன், பல்லவன்-திருவள்ளுவர் ஆகியோர் பெயர்களால் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்.
* மாணவர்களுக்கு +2 வரை இலவசப் பேருந்துப் பயணச் சலுகை வழங்கினார்.
* பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ, ஐ.பி.எஸ். பயிற்சி முகாம் தொடங்கினார்.
* மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாவை ஒழித்து, அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷாவை வழங்கினார்.
* ஏழையர்க்கு கண்ணொளி வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்.
* தொழுநோய் மற்றும் இரவலர்க்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தார்.
* ஆதரவற்ற குழந்தைகளைக் காத்திடக் கருணை இல்லம் அமைத்தார்.
* தமிழ்நாட்டில் மே முதல் நாளைத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தார்.
* தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இடஒதுக்கீடு வழங்கினார்.
* கல்வித்துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வுகளை நடைமுறைப்படுத்தினார்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கினார்.
* மாநகராட்சி மேயருக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டு வந்தார்.
* மாநில சுயாட்சி குறித்து ஆராய்ந்திட ‘இராஜமன்னார் குழு’ அமைத்தார்.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு அளித்தார்.
* கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.
* தியாகி வ.உ. சிதம்பரனார் சிறையில் மெய்நோக இழுத்த செக்கினைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்து அதை நினைவுச் சின்னமாக்கினார்.
* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது போல், மொழிப்போர் தியாகிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கினார்.
* விடுதலைப் போராட்ட வீரர் இறந்துவிட்டால், அவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என ஆணையிட்டார்.
* ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார்.
* சாதி, சமயப் பூசல்களை மறந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திட நாடெங்கும் சமத்துவபுரம் திறந்து அவற்றிற்குப் பெரியார் நினைவு சமத்துவபுரம் எனப் பெயரிட்டார்.
* நாட்டு மக்களிடையே கூட்டுறவு, தற்சார்பு உணர்வுகளை வளர்த்திட நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தார்.
* தமிழ்நாட சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி அதனைத் தில்லிக்கு அனுப்பினார்.
* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலங்காக்கத் தனித்துறை (அமைச்சகம்) ஏற்படுத்தினார்.
* சமூக சீர்திருத்தத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்
.
* இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.
* கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீட வழங்கினார்.
* பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி வழங்கினார்.
* மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றினார்.
* உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இடஒதுக்கீடு
* அரசு அலுவலர்கள், அரசின் நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள். கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில், பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு செய்தார்.
* நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட சிற்றுந்து (மினிபஸ்) திட்டம் கொண்டு வந்தார்.
* தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் (1969) ‘வங்கிகளை நாட்டுடைமை’ ஆக்கிட யோசனை கூறினார். (இதன் அடிப்படையில்தான் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 14 தனியார் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார்.
* பன்னாட்டு மூலதனத்தை தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பூங்கா என்னும் கணினி மென்பொருள் பூங்காவினை அமைத்தார்.
* அரசு ஊழியர்களைப் பழிவாங்குவதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரகசியக் குறிப்பேடு முறையை ஒழித்தார்.
* தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மாநில திட்டக்குழுவை அமைத்தார்.
* எட்டாம் வகுப்பு வரை படித்த ஏழை இளம் பெண்களுக்கு அரசின் சார்பில் ரூ.5,000 (அதன்பின் ரூ.10,000- இப்பொழுது ரூ.15,000- திருமண நிதி உதவித் திட்டம் வகுத்தார்)
* ஏழை எளியோருக்கான பன்முனை மருத்துவப் பரிசோதனைத் திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தை அறிவித்தார்.
* சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி அலுவலகம் கட்ட ரூ.5 இலட்சம் ஒதுக்கீடு செய்தார்.
* தமிழகத்தை இந்தியாவின் டெட்ராய்ட் ஆக மாற்றிய கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதித்தார்.
* உலகத் தமிழ் இணையம் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.
* தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை சிறப்பாக நடத்தினார்.
* சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்தார்.
* தமிழர்களின் 150 ஆண்டு கனவான சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைக்கு வரச் செய்தார்.
* தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார்.
* தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.
* கடல் சார் பல்கலைக் கழகம் அமைக்கச் செய்தார்.
* பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் அதே மேடையில் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் அறவே ரத்து, சத்துணவில் வாரம் இரு முறை முட்டைகள் வழங்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்து, அதற்கான கோப்புகளில் மக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார்.
* தந்தை பெரியார் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணியாக தகுதியுள்ள அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகராக உத்தரவு பிற்பித்தார்.
* எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமக்கப்பட்டது.
* கண்ணகி சிலை திறப்பு
* இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல்
* நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்
* பனைத் தொழிலாளர் நலனுக்குத் தனி வாரியம்
* தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்
* நுழைவுத் தேர்வு ரத்துக்கு நிபுணர் குழு அமைப்பு
* மருத்துவம், பொறியில் கல்விக் கட்டணம் குறைப்பு
* மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறுதல்
* பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்க மானியம்
* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்
* அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம்
* சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
* அரசு ஊழியர்களுக்கு எதிரான டெஸ்மா சட்டம் ரத்து
* அரசுப் பணியில் சேர வயது வரம்பு நீட்டிப்பு
* இளைஞர் சுய உதவி குழு அமைத்தல்
* சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டு வருதல்
* கிராமங்களில் அமைதி ஏற்பட கோவில்களில் வழிபடும் இடங்களில் ஏற்றத்தாழ்வு அகன்றிட முக்கியப் பிரமுகர்ளுக்கு, பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது.
* தலைவர் கலைஞர் அவர்களின் தன்னிகரில்லாப் பணிகள் இன்னும் பலப்பல.... பலப்பல.. பலப்பல.. தொடரும்... தொடரும்.....
Nice......
ReplyDelete