Pages

Wednesday 26 March 2014

இராமேசுவரத் தீர்த்தங்கள்



இராமேசுவரத் தீர்த்தங்கள்

இராமேசுவரத்திற்குச் செல்பவர்கள் 22 தீர்த்தங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைக் கொண்டு நீராடினால் பல நன்மைகள் உண்டாகும் என்கிற நம்பிக்கை இந்துசமயத்தினரிடம் உள்ளது.

அந்தத் தீர்த்தங்களின் பட்டியல் இது.


1. மகாலட்சுமி தீர்த்தம்

2. சாவித்திரி தீர்த்தம்

3. காயத்திரி தீர்த்தம்

4. சரசுவதி தீர்த்தம்

5. சேதுமாதவ தீர்த்தம்

6. கந்தமாதன தீர்த்தம்

7. கவாட்ச தீர்த்தம்

8. கவப தீர்த்தம்

9. நளன் தீர்த்தம்

10. நீலன் தீர்த்தம்

11. சங்க தீர்த்தம்

12. சக்ர தீர்த்தம்

13. பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்

14. சூரிய தீர்த்தம்

15. சந்திர தீர்த்தம்

16. கங்கா தீர்த்தம்

17. யமுனா தீர்த்தம்

18. கயா தீர்த்தம்

19. சிவ தீர்த்தம்

20. சத்தியாம்ருத தீர்த்தம்

21. சர்வ தீர்த்தம்

22. கோடித் தீர்த்தம் (வங்கக் கடல்)

இராமேசுவரம் மற்றும் இராமேசுவரம் சுற்றுப்பகுதிகளில்
மொத்தம் 48 தீர்த்தங்கள் இருக்கின்றன என்றும்,
இவையனைத்திலும் நீராடினால் பல நற்பயன்களை அடைய
முடியும் என்கின்றனர்.

1. உப்பூர் விநாயகர் தீர்த்தம்

2. நவபாஷாண தீர்த்தம் (தேவி பட்டினம்)

3. சக்கர தீர்த்தம் (தர்மபுஷ்கரணி)

4. சக்கர தீர்த்தம் (திருப்புல்லானி)

5. வேதாள தீர்த்தம்

6. பாபவினாச தீர்த்தம்

7. கபி தீர்த்தம்

8. வைரவ தீர்த்தம் (பாம்பன் கடலூர்)

9. சீதாகுண்ட தீர்த்தம்

10. வில்லூன்றித் தீர்த்தம் (கடலூர்)

11. மங்கல தீர்த்தம்

12. இரணவிமோசன தீர்த்தம்

13. அமுதவாலி தீர்த்தம்

14. லட்சுமண தீர்த்தம்

15. ஸ்ரீராம தீர்த்தம்

16. தனுசுகோடி தீர்த்தம்

17. சடாம குட தீர்த்தம்

18. சுக்ரீவ தீர்த்தம்

19. பாண்டவ தீர்த்தம்

20. பீம தீர்த்தம்

21. அர்ச்சுன தீர்த்தம்

22. நகுல தீர்த்தம்

23. சகாதேவ தீர்த்தம்

24. திரௌபதி தீர்த்தம்

25. பிரம்ம தீர்த்தம்

26. பரசுராம தீர்த்தம்

27. அனுமகுண்ட தீர்த்தம்

28. அகத்திய தீர்த்தம்

29. அக்னி தீர்த்தம்

30. நாக தீர்த்தம்

31. சேதுமாதவ தீர்த்தம்

32. நளன் தீர்த்தம்

33. நீலன் தீர்த்தம்

34. கபி தீர்த்தம்

35. கவாட்சி தீர்த்தம்

36. கந்தமாதன தீர்த்தம்

37. பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்

38. சூரிய புஷ்க்ரணி தீர்த்தம்

39. சந்திர புஷ்கரணி தீர்த்தம்

40. கங்காய முனகாய தீர்த்தம்

41. சங்க தீர்த்தம்

42. முனி தீர்த்தம்

43. காயத்திரி சாவித்திரி தீர்த்தம்

44. மகாலட்சுமி தீர்த்தம்

45. சிவ தீர்த்தம்

46. சத்யாமூர்த்த தீர்த்தம்

47. சர்வ தீர்த்தம்

48. கோடித் தீர்த்தம் (வங்கக் கடல்)

Tuesday 25 March 2014

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - நீர்

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - நீர்
#நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜனின் எடை இயைபு விகிதம் - 1:8
# நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கன அளவு இயைபு விகிதம் - 2:1
# நீர் மூலக்கூறில் வேதியியல் பெயர் - ஹைட்ரஜன் மோனாக்சைடு அல்லதுஆக்சிஜன் ஹைட்ரைடு.
# நீரின் கன அளவு இயைபை கண்டறியும் சோதனையின் பெயர் - ஹாப்மன் முறை
# நீரின் கன அளவு இயைபைக் கண்டறிய உதவும் உபகரணத்தின் பெயர் - ஹாப்மன் வோல்டா மீட்டர்
# ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை - 0 டிகிரி செல்சியஸ்
# ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் கொதிநிலை - 100 டிகிரி செல்சியஸ
# தூய நீர் மின்னோட்டத்தைக் கடத்துமா - கடத்தாது
# பனிக்கட்டி நீரில் மிதக்கக் காரணம் - 0 டிகிரி செல்சியசில் ஒருகுறிப்பிட்ட நிறையை உடைய பனிக்கட்டியின் பருமன் அதே நிறையை உடைய நீரின் பருமனை விட அதிகம்.
# கடல்நீரில் உப்பின் சதவீதம் - 3.5 சதவீதம்
# கடல் நீரில் அதிகமாகக் காணப்படுவது - சோடியம் குளோரைடு (2.8 சதவீதம்)
# கடல்நீரிலிருந்து உப்புக்கள் எந்த முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது - ஆவியாதல் முறையின் மூலம்
# அயோடின் பற்றாக்குறையால் உருவாகும் நோய் - முன் கழுத்து கழலை
# கடல் நீரிலிருந்து தூய நீர் எந்த முறையின் மூலம் பெறப்படுகிறது - எதிர் சவ்வூடு பரவல் முறை
# நீரேற்று நிலையங்களில் நீரில் உள்ள கசடுகளை வீழ்படிவாக்குவதற்காக நீருடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் - பொட்டாஷ் படிகாரம் மற்றும் சுண்ணாம்ப
# நீரின் மிகப்பெரிய இயற்கை ஆதாரம் - கடல்
# நீரின் அடர்த்தி அதன் பருமனுக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.
# ஹாப்மன் வோல்டா மீட்டரில் நீரை மின்னாற்பகுக்க எதிர்மின்வாயில் ஹைட்ரஜன் வாயும், நேர் மின்வாயில் ஆக்சிஜன் வாயுவும் சேகரமாகும்.
# நீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆனது என்று கண்டறிந்தவர் - ஏ.எல்.லவாய்சியர் (1783)
# இரு கன அளவு ஹைட்ரஜனும், ஒரு கன அளவு ஆக்சிஜனும் சேர்ந்த கலவையை எரி்த்து நீரைத் தயாரித்தவர் - ஹென்றி காவண்டிஷ் (1781)
# உள்ளுறை வெப்பத்தின் அலகு - கலோரி/கிராம்
# நுண்ணுயிரிக் கொல்லியாகப் பயன்படுவது - சலவைத் தூள்
# உறையும்போது கன அளவு அதிகரிக்கும் பொருள் - நீர்
# இந்தியாவில் நீர் மாசுபாடு அடைந்திருப்பதன் சதவீதம் - 70 சதவீதம்.
# அமிலம் கலந்த நீரை மின்னாற்பகுக்கும்போது ஹைட்ரஜனும்,ஆக்சிஜனும் கிடைக்கிறது.
# நீரின் மூன்று நிலைகள் - திட, திரவ, வாயு
# 4 டிகிரி செல்சியத்தில் நீரின் அடர்த்தி 1 கிராம்/கன சென்டிமீட்டர் என்றால் பனிக்கட்டியின் அடர்த்தி - 0.91 கிராம்/கன சென்மீட்டர்
# தண்ணீரைப் பற்றியும் அதன் விரவலைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு - நீரியல் (ஹைட்ராலஜி)
# தொழிற்சாலைக் கழிவுகளில் உள்ள கரிம மாசுக்களை காற்றில் உள்ள பாக்டீரியாக்களைக் கொண்டு சிதைந்த பின்னரே அக்கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்
அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீஉ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை
எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி
ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
ஒ-மதகு, (நீர் தாங்கும் பலகை)
ஔ-பூமி, ஆனந்தம்
க-வியங்கோள் விகுதி
கா-காத்தல், சோலை
கி-இரைச்சல் ஒலி
கு-குவளயம்
கூ-பூமி, கூவுதல், உலகம்
கை-உறுப்பு, கரம்
கோ-அரசன், தந்தை, இறைவன்
கௌ-கொள்ளு, தீங்கு
சா-இறத்தல், சாக்காடு
சீ- லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு-விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே-காலை
சை-அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ- மதில், அரண்
ஞா- பொருத்து, கட்டு
தா- கொடு, கேட்பது
தீ-நெருப்பு , தீமை
து-உண்
தூ-வெண்மை, தூய்மை
தே-கடவுள்
தை-தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா-நான், நாக்கு
நி- இன்பம், அதிகம், விருப்பம்
நீ-முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ- யானை, ஆபரணம், அணி
நே- அன்பு, அருள், நேயம்
நை- வருந்து
நோ- துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ- மரக்கலம்
ப-நூறு
பா- பாட்டு, கவிதை
பூ- மலர்
பே- நுரை, அழகு, அச்சம்
பை- கைப்பை
போ
செல், ஏவல்
ம- சந்திரன், எமன்
மா- பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ- மேலே , உயர்ச்சி, உச்சி
மூ- மூப்பு, முதுமை
மே- மேல்
மை- கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ- மோதல், முகரதல்
ய- தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா- ஒரு வகை மரம், யாவை, இல்லை
வ- நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா- வருக, ஏவல்
வி- அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ- மலர் , அழிவு
வே- வேம்பு, உளவு
வை- வைக்கவும், கூர்மை
வௌ- வவ்வுதல்
நோ- வருந்து
ள- தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு- நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று- எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

Sunday 23 March 2014

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: 

பத்துப்பாட்டு நூல்கள்: 

திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு - நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை - நக்கீரர்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் - 11

நாலடியார் - சமண முனிவர்கள்
நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை - முள்ளியார்
பழமொழி - முன்றுரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசான்
ஏலாதி - கணிமேதாவியர்
திருக்குறள் - திருவள்ளுவர்

அகநூல்கள் 6 

ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
முதுமொழிக்காஞ்சி - கூலடூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்

புறநூல் 

களவழி நாற்பது - பொய்கையார்

திருக்குறள்: 

அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
நாயன்மார்கள் 63
திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
பெரியபுராணம் - சேக்கிழார்
அப்பர் - தேவாரம்
மாணிக்கவாசகர் - திருவாசகம்
திருமூலர் - திருமந்திரம்
ஐம்பெரும்காப்பியங்கள்: 
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் 
சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
குண்டலகேசி - நாதகுத்தனார்
வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஐஞ்சிறுகாப்பியங்கள்: 

சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 
நீலகேசி - தோலாமொழித் தேவர்
உதயண குமார காவியம் - உரை
நாக குமாரகாவியம் - உரை
யசோதா காவியம் - உரை
இலக்கண நூல்கள் - ஆசிரியர் 

அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
புற்பொருள் - ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் - அமிதசாகரர்
வீரசோழியம் புத்தமித்திரர்
நன்னூல் - பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்

***

நூல்கள் - ஆசிரியர்
கம்பராமாயணம் - கம்பர்
கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
பெரியபுராணம் - சேக்கிழார்
திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
நளவெண்பா - புகழேந்தி புலவர்
வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
சீறாப்புராணம் - உமறுப்புலவர்
திருப்பாவை - ஆண்டாள் 
திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
திருவாசகம் - மாணிக்கவாசகர்
மூவருலா - ஒட்டக்கூத்தர் 
தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
தேம்பாவணி - வீரமாமுனிவர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
திருப்புகழ் - அருணகிரி நாதர்

****

கவிஞர்கள் - நூல்கள்

இராமலிங்க அடிகள் - திருவருட்பா 
குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா
பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.

Tuesday 18 March 2014

விடை

விடை எட்டு வகைப்படும்

1. கட்டு விடை,
2. மறை விடை,
3. நேர் விடை,
4. ஏவல் விடை,
5. வினா எதிர் வினாதல் விடை,
6. உற்றது உணர்தல்,
7. உருவது கூறல் விடை,
8. இனமொழி விடை. 


கட்டு விடை 

கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது. பாரிமுனைக்குச் செல்லும் வழி இதுதான். 

மறை விடை 

கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல் 

நீ நீந்துவாயா? நீந்த மாட்டேன் 

நேர் விடை 

வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல் 

நாளை அலுவலகம் செல்வாயா? செல்வேன் 

ஏவல் விடை 

கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல் 

கடைக்கு செல்வாயா? நீயே செல் 

வினா எதிர் வினாதல் விடை 

கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது. 

நீ தேர்வுக்குப் படித்தாயா? படிக்காமல் இருப்பேனா 

உற்றது உரைத்தல் விடை 

கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல் 

நீ பாடுவாயா? பல் வலிக்கிறது. 

உருவது கூறுதல் விடை 

கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது 

எட்டிக்காய் சாப்பிடுகிறாயா? கசக்கும் 

இனமொழி விடை 

கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது இனமொழி விடையாகும் 

நீ ஆடுவாயா? பாடுவேன்