Pages

Wednesday, 12 March 2014

பெனிசிலின் தந்தை அலெக்ஸாண்டர் பிளெமிங்

 
பென்சிலின் என்ற நோய் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்து மருத்துவ உலகினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் அலெக்சாண்டர் பிளெமிங்.
உலகில் பல்வேறு மருத்துவ கண்டுபிடிப்புகளும், முன்னேற்றங்களும் வந்தாலும் அவற்றில் பென்சிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
பென்சிலின்
இன்று வரை உலகின் சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் மருந்தாக இருப்பது பென்சிலின்.
பென்சிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம்.
லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பென்சிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அலெக்சாண்டர் பிளெமிங்

ப்ளெமிங் 1881ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார்.
பின்னாளில் அவர் பென்சிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது.
பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.

நோய்க்கிருமிகளுடன் போராடிய ப்ளெமிங்

படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங்.
ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.
நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள்.

போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர்.
இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார்.
குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.
பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்.
இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார்.

காளானிலிருந்து பெனிசிலின்

1928ம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார்.
கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார்.
காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.

பாராட்டுக்களும் விருதுகளும்

1945ம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944ம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1999ம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.

2000ம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன.

2002ம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.

அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது.

இறப்பு
தன் கண்டுபிடிப்பால் பல உயிர்களை வாழவைத்த அலெக்சாண்டர் பிளெமிங் தனது 75 வயதில் காலமானார், இவர் கண்டுபிடித்த பென்சிலின் இன்று பல அறிய மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக உள்ளது, அவர் கண்டுபிடித்த பென்சிலின் மருந்து பல கோடி உயிர்களை இன்றும் காப்பாற்றிக்கொண்டு தான் இருக்கிறது

Tuesday, 11 March 2014

மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்



1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்/Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)- அக்டோபர் 2009:
இது கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் என்ற பெயரில் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பின்பு இது 2, அக்டோபர் 2009 ஆம் ஆண்டு இதன் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
இதன் திட்டம் கிராமப்புற பகுதியில் வாழும் மக்களுக்கு 100 நாள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கியது மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை பாதுகாப்பது ஆகும்,
இந்த திட்டத்தின் முலம் 14 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றது.
தற்போது இதன் வேலை நாட்களை 150 நாட்கள் என்று மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது வரும் ஏப்ரல் 2014 இல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சுவர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா/Swarnajayanti Gram Swarozgar Yojana (SGSY) (SGSY)- ஏப்ரல் 1999:
இது சுய உதவி குழுக்கள் அமைத்து அந்த அமைப்பின் மூலம் கிராமப்புற ஏழை மக்களுக்கு சுய வேலைவாய்ப்பு அளிப்பது இதன் குறிக்கோளாகும். இது ஏப்ரல் 1, 1999 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் சில மாற்றங்களுடன் 2011 ஆம் ஆண்டு தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihood Mission- NRLM) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
3. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா/ Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)- டிசம்பர் 2000:
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) 25 டிசம்பர் 2000 அன்று தொடங்கப்பட்டது. இது நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளையும் இணைப்பு சாலைகள் கொண்டு முக்கிய சாலைகளுடன் இணைப்பது ஆகும். இந்த திட்டத்திற்க்கான நிதி முழுமையாக மத்திய அரசு வழங்குகிறது.
4. இந்திரா அவாஸ் யோஜனா/ Indira Awaas Yojana (IAY)- 1985:
இந்த திட்டத்தின் நோக்கம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வீடு கட்டிக்கொள்ள தேவையான கட்டுமான பொருட்களுக்கு நிதி உதவி வழங்குவது ஆகும். இதன் முலம் சமதரை பகுதியில் வாழும் மக்களுக்கு 70,000/- என்றும் மற்றும் மலை போன்ற பகுதியில் வாழும் மக்களுக்கு ரூ.75,000/- வழங்குகிறது.
கூடுதலாக மொத்த சுகாதாரம் திட்டத்தின் ( Total Sanitation Programme -TSP) கீழ் கழிப்பறை கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டம் 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
5. பாரத் நிர்மாண்/ Bharat Nirman- 2005:
இது கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முலம் கிராமங்களில்
1)
சாலை இணைப்பு
2)
மின் வசதியாக்கம்
3)
கிராமப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம்
4)
தொலைபேசி இணைப்பு
5)
வீட்டு வசதி
6)
நீர் பாசனம்
ஆகிய ஆறு முக்கிய திட்டங்கள் கையாளப்படுகின்றன. இது டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மாதிரி அமைப்பான PURA (கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்- Providing Urban Amenities in Rural Areas) வை அடிப்படையாக கொண்டது. முதல் கட்டம் 2009 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது மற்றும் இப்போது இரண்டாம் கட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
6. ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின்/ Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)- டிசம்பர் 2005:
இது பெரிய நகரங்களை நவீனமயமாக்கல் திட்டம் ஆகும். இது 3 டிசம்பர் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு ஏழு ஆண்டு கால திட்டமாக தொடங்கப்பட்டது, 2012 ஏப்ரல் மாதம் இந்த திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகள் நிட்டிக்கப்பட்டது. மார்ச் 31, 2014 ஆம் நாள் இத்திட்டம் முடிவடைகிறது.
7. சுவர்ண ஜெயந்தி ரோஸ்கார் யோஜனா/ Swarna Jayanti Shahari Rozgar Yojana (SJSRY):
1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைகளுக்கு சுய தொழில் மற்றும் கூலி வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும். இதில் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் 2007 ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது.
8. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்/ Integrated Child Development Scheme (ICDS):
1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 6 வயது குறைவான வயது உடைய குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாடு பிரச்சினையை போக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தின் முக்கிய பயனாளிகள் பெண் குழந்தைகள் தங்கள் இளமை வயது வரை , 6 வயதுக்கு குறைவான குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகும்.
9. தேசிய ஊரக சுகாதார திட்டம்/ National Rural Health Mission (NRHM):
முதலில் 7 ஆண்டுகள் (2005-12) காலத்துக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இது கிராமப்புற பகுதிகளில் சுகாதார வசதிகளை வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஜனனி சுரக்ஷா யோஜனா இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
மே 2013 இல் மத்திய அரசாங்கம் தேசிய ஊரக சுகாதார திட்டத்தை தேசிய சுகாதார திட்டத்தின் (National Health Mission) கீழ் ஒரு துணை திட்டமாக கொண்டுவந்துள்ளது.
10. ஜனனி சுரக்ஷா யோஜனா/ Janani Suraksha Yojana:
இந்த திட்டம் ஏப்ரல் 12, 2005 இல் தொடங்கப்பட்டது. இது நாட்டில் பிறக்கும் குழந்தைகள் இறப்பை குறைப்பது இதன் நோக்கம் ஆகும். மருத்துவமனைகளில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது.
11. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்/ Indira Gandhi National Old Age Pension Scheme:
இந்த திட்டத்தின் முலம் 65 வயதுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு 200 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குவது ஆகும். 80 வயது கடந்தவர்களுக்கு 500 ரூபாய் வழங்குகிறது.
12. ராஷ்டிரிய ஸ்வஸ்த்தி பீமா யோஜனா (தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம்)/ Rastriya Swasthya Bima Yojna:
ஏப்ரல் 1, 2008 இல் தொடங்கப்பட்டது. வறுமை கோட்டுக்கும் கீழ் உள்ள மக்களுக்கு சுகாதார காப்பீடு வசதி வழங்குவது இதன் நோக்கம் ஆகும்.
இதன் முலம் உள்நோயாளி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ 30,000 அளவிற்கு மருத்துவ காப்பிடு வழங்கப்படுகிறது.
13. ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டம்/ Jawaharlal Nehru National Solar Mission:
காலநிலை மாற்றத்தின் மீதான தேசிய செயல் திட்டத்தின் ஒரு பகுதி இத்திட்டம் ஆகும். இது 11 ஜனவரி, 2010 இல் தொடங்கப்பட்டது.
இதன் முக்கிய அம்சம் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தியின் முலம் 20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
14. ராஜீவ் காந்தி கிராமீன் வித்யூதிகரன் யோஜனா/ Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana:
அனைத்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களிலும் மின்சார வழங்குதல் மற்றும் ஒவ்வொரு வீடும் மின்சாரம் பெற்று இருப்பதை உறுதி செய்வது ஆகும். இது மார்ச் 2005 இல் தொடங்கப்பட்டது.
15. ஆம் ஆத்மி பீமா யோஜனா/ Aam Aadmi Bima Yojna:
கிராமப்புற பகுதியில் வாழும் நிலமற்ற குடும்பங்களின் குடும்ப தலைவர் காப்பீடு திட்டம் ஆகும். இது அக்டோபர் 2, 2007 இல் தொடங்கப்பட்டது. LIC இந்த திட்டத்தை கையாளுகின்றது.
16. ராஜீவ் அவாஸ் யோஜனா/ Rajiv Awas Yojna:
இது 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 
இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு “குடிசை இல்லாத இந்தியாவை ஊக்குவிக்கும் நோக்கம்” ஆகும் மற்றும் குடிசைவாசிகளின் தரத்தை உயர்த்துவது ஆகும்.
17. கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா/ kasturba gandhi balika vidyalaya:
இது ஓ.பி.சி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த பெண் மாணவிகளுக்கு நடுநிலை குடியிருப்பு பள்ளிகள் அமைத்து தருவது ஆகும். இது 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
18. பொது சுகாதார காப்பீடு திட்டம் / Universal health Insurance Scheme:
2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராம பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கான சுகாதார காப்பீடு திட்டம் ஆகும்
19. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா / Pradhan Mantri Adarsh Gram Yojana:
இது 2009-10 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இது தாழ்த்தப்பட்ட மக்கள் (50% மேல்) அதிக விகிதம் கொண்ட கிராமங்களில் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது. கிராமப்புற சாலைகள், குடிநீர் வசதி, வீட்டு வசதி, மின்சாரம் ஆகியவை இதம் முலம் வழங்கப்படுகிறது.
20. பிரதம மந்திரி ரோஜகர் யோஜனா/ pradhan mantri rozgar yojana:
இது அக்டோபர் 2, 1993 ஆம் நாள் தொடங்கப்பட்டது. வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் சிறுதொழில் தொடங்க மற்றும் சிறப்பு பயிற்சிகள் இதம் முலம் வழங்கப்படுகிறது.

இந்திய குடியரசுத் தலைவர்கள்

  • இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர்
  • இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்
  • இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்
  • இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
  • குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
  • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
  • குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்
  • குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்
  • குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)
  • துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
  • குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை
  • போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி
  • இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
  • தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்
  • குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35
  • குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
  • குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? - ஆம்
  • குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை
  • குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு
  • புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்
  • இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை
  • குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
  • குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
  • இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
  • துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
  • மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்
  • அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
  • துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
  • மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்
  • பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
  • அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.
  • குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
  • இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
  • நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
  • தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
  • மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? - இல்லை
  • குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்
  • குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)
  • குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை
  • பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
  • பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123
  • குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்
  • மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
  • மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331
  • அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
  • பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
  • ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்
  • இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143
  • உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352
  • குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360
  • ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்
  • இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
  • குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்
  • இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து
  • இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,50,000
  • இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,25,000
  • இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
  • துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை - மாநிலங்களவை

Thursday, 13 February 2014

பலருக்குத் தெரியாத உண்மை!

பலருக்குத் தெரியாத உண்மை!


     இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற இந்திய அரசாங்கம் இரண்டு பேரை தேர்ந்தெடுத்தது. ஒருவர் "வ. உ. சி பிள்ளை", மற்றொருவர் டாக்டர் "அம்பேத்கர்"ஆனால் தன்னை விட அதிகம் படித்தவர், நல்ல சிந்தனையாளர் நல்ல  மனிதர்  என்று   மேலிடத்தில்   சொல்லி   டாக்டர்.  அம்பேத்கருக்கு, வ. உ. சி பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து விட்டார். டாக்டர் அம்பேத்கர் தன் சுயசரிதையில் இந்த நிகழ்வை பெருமையாக எழுதி வைத்துள்ளார்.

     அய்யா வ. உ. சி.யை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது? ஆனால் அவரை முழுசாக தெரிந்தவர்கள் ஒரு சிலரே.... அய்யா வ. உ. சி. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் மட்டும்தான் ஓட்டினாரா?  இல்லவே இல்லை அவர் பல துறைகளில் கொடிகட்டி பறந்தார்.

     முதன் முதலில் தொழிற்சங்கத்தை நிறுவினார். அதற்குத் தலைவைராகவும் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் தொழிற்ச்சாலைகளில் ஒரு தொழிலாளி 18 மணி நேரம் கட்டாயம் வேலை பார்க்கவேண்டும் என்று சட்டம் இருந்தது. இதை வ. உ. சி கடுமையாக எதிர்த்து போராடி ஒரு தொழிலாளி 8 மணி நேரம் தான் உழைக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தார். 

     அது மட்டுமா வ. உ. சி., சிறந்த இலக்கியவாதி. அனைத்து இலக்கணங்களையும் கற்றவர். அவரிடம் போட்டி போட்டு வெற்றி பெற யாராலும் முடியாது. ஒரு காரியத்தில் இறங்கினால் முன் வைத்த காலை பின் வாங்கமாட்டார். பிடிவாதக்காரர். தாழ்த்தபட்ட மக்களை தன் உயிராக நினைத்தவர். ஏழை எளிய (Sc) மக்களுக்கு தன் வீடு வாசல் நிலங்களை இலவசமாக கொடுத்தவர். 

     அது மட்டுமா வள்ளுவர் எழுதிய திருக்குறளில் சில விஷமிகள் தங்கள் சுயநலத்துக்காக திருக்குறளை திருத்தி எழுதி வைத்தனர். இதை வ. உ. சி. கண்டுபிடித்து உண்மையான திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

     சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகி எழை மக்களுக்காக பணம் வாங்காமல் இலவசமாக வாதாடினார். இப்படி இன்னும் பல விஷயங்களை வ. உ. சியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

     ஆனால் இப்படியெல்லாம் வாழ்ந்த ஒரு கோடிஸ்வர மகாமனிதர் கடைசியில் தன் குடும்பத்தை காப்பாற்ற தெருத்தெருவாக சைக்கிளில் வைத்து மண்ணெண்னை விற்று பிழைப்பு நடத்தினார் என்று சொன்னால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறதா? இல்லையா?

     வ. உ. சியின் வாழ்க்கை வரலாறை படிப்பவர் கண்கள் கலங்குவது உறுதி. வ. உ. சியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது தமிழனாய் பிறந்த அனைவரது கடைமையாகும்.

உண்மை தொடரும்....

"இனைந்திருப்போம்....
இனம் வளர்ப்போம்....
இகழ்ந்து பேசினால்....
எதிர்த்தடிப்போம்........."