Pages

Saturday 14 September 2013

பாண்டிய நாடு

பாண்டியர்கள் வரலாறு


இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும்குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம்விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரைபாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

 


 "லெமூரியா கண்டம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன் முதல் 50,000 ஆண்டுகட்கு முன் வரை இருந்தது என்றும், 50,000 ஆண்டுகட்கு முன் பெரும்பாலும் அழிந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதில் மீதி இருந்த பகுதி தமிழ்நாட்டுடன் ஒட்டியிருந்த குமரிக்கண்டமாக இருக்க வேண்டும். லெமூரியாவை விழுங்கியது போல, கடல், குமரிக் கண்டத்தையும் விழுங்கி விட்டது. 

பாண்டியரின் தோற்றம்

சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில்தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.

பாண்டியரைப் பற்றிய பதிவுகள்

பாண்டிய மன்னர்களின் தலைநகர் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.

மஹாபாரதம்

திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.

அசோகனின் கல்வெட்டுக்களில்

மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய அரசன் அசோகன்கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.

மகாவம்சம்

இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம்கூறுகின்றது.

பிற நாட்டவர் பதிவுகள்

கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற யவன நாட்டுத்தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 'பிளைனி' என்ற மேனாட்டான் தமிழகத்தைக் காண வந்தான்.அவனது பயண நூலில் பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின் தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு சாதி மக்கள் இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண் பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய நாட்டை ஆளும் உரிமை கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை வைத்திருந்தாள்.அவளது மரபினர் தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார் பிளைனி.

சங்க காலப் பதிவுகள்

பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூமாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும்மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.

இமயம்வரை பாண்டியரின் ஆட்சி

மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரைதமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சிபெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள்.இவளது வழிமுறையினரே மௌரியர்கள்.அந்த வழியில் சித்திராங்கதன்வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி


களப்பிரர் ஆட்சி

வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும்,சேர,சோழ,பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர்.களப்பிரரைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 600-700 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.

சோழராட்சி

பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன்மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறைசெலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

மகமதியர் ஆட்சி

மகமதியர் வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குப் படையெடுத்து வந்தனர். கோவில்களைக் கொள்ளையடிப்பதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு படை திரட்டி வந்த கில்ஜி பேரரசின் மன்னன்மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள்பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் எனபார்னி என்பவன் குறித்துள்ளான். 1830 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் மகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த 'ஜலாலுடீன் அசன்சா' மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி,குட்புதீன், நாசிருடீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு,விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர். என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மகமதியர் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:-
மன்னன்ஆட்சிக்காலம்
மாறவர்மன் குலசேகர பாண்டியன்கி.பி. 1314-1346
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்கி.பி. 1315-1347
மாறவர்மன் வீரபாண்டியன்கி.பி. 1334-1380
மாறவர்மன் பரக்கிரம பாண்டியன்கி.பி. 1335-1352
இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் விரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விஜயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராயர்களின் ஆட்சி

பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள்பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்குவாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன்எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் மதுரையினை ஆட்சி செய்துள்ளனர். புதுக்கோட்டை குடுமியான் மலைக் கல்வெட்டில்பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment