Pages

Saturday 14 September 2013

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம்




அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் தேனி
பரப்பு 3,243 ச.கி.மீ.
மக்கள்தொகை 10,93,950
ஆண்கள் 2,52,986
பெண்கள் 5,40,964
மக்கள் நெருக்கம் 337
ஆண்-பெண் 978
எழுத்தறிவு விகிதம் 71.58%
இந்துக்கள் 0,11,456
கிருத்தவர்கள் 33,830
இஸ்லாமியர் 48,077
புவியியல் அமைவு
அட்சரேகை 90.33-100.33N
தீர்க்க ரேகை 770-780.30E

புவியியல் அமைவு

அட்சரேகை: 90.33-100.33N
தீர்க்க ரேகை: 770-780.30E

இணையதளம்: 
www.theni.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrthn@tn.nic.in

தொலைபெசி: 04546-254732, 254762


எல்லைகள்: இதன் வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் மதுரை மாவட்டமும்;தெற்கில் விருதுநகர் மாவட்டமும் , மேற்கில் கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. 

வரலாறு: தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும்.
தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது. 
வருவாய் கோட்டங்கள்
2
வட்டங்கள்
5
நகராட்சிகள்
6
பேரூராட்சிகள்
22
ஊராட்சி ஒன்றியங்கள்
8
ஊராட்சிகள்
130

வருவாய்த்துறை அமைப்புகள்
தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பெரியகுளம், உத்தமபாளையம் இரண்டு வருவாய்க் கோட்டங்கள், இந்த வருவாய்க் கோட்டங்களின் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என்று ஐந்து தாலுகா அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வருவாய்க் கிராமங்கள்
இம்மாவட்டத்தில், ஆண்டிபட்டி வட்டத்தில் 25 வருவாய்க் கிராமங்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 15 வருவாய்க் கிராமங்களும், தேனி வட்டத்தில் 12 வருவாய்க் கிராமங்களும், பெரியகுளம் வட்டத்தில் 22 வருவாய்க் கிராமங்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 39 வருவாய்க் கிராமங்களும், என வருவாய்த்துறை அமைப்பின் கீழ் 113 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிலுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் (முன்பு தலையாரி என்று அழைக்கப்பட்டனர்) உள்ளனர்.
காவல்துறை அமைப்புகள்
தேனி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான காவல்துறையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஒன்றும், இதன் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய 5 இடங்களில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களும், இதன் கீழ் சட்டம்- ஒழுங்கிற்கான 30 காவல் நிலையங்களும், 4 மகளிர் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள்
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் , இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராமப் பஞ்சாயத்துக்களும் என உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி உள்ளாட்சித்துறை அலுவலர்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மின் உற்பத்தி நிலையங்கள்
தேனி மாவட்டத்திலுள்ள ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை
1. பெரியார் நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம் 
2. சுருளியாறு நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம் 
3. வைகை நுண் புனல் மின் நிலையம். 
இவை தவிர தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் காற்றைப் பயன்படுத்தி காற்றாலைகள் கொண்டு மின் உற்பத்தி செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன
திரைப்படத் துறையினர்
தேனி மாவட்டத்தில் பிறந்த திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்), மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், பாரதிராஜா, கஸ்தூரி ராஜா, பாலா, டாக்டர் ராஜசேகர் மற்றும் செல்வராகவன் ஆகியோர் இயக்குனர்களாகவும், இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி ஆகியோர் திரை இசைத் துறையிலும், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கவிஞர்களாகவும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர்.
எழுத்தாளர்கள்
தேனி மாவட்டத்தில் இருந்து கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன், கவிஞர் மு.மேத்தா, உமா மகேஸ்வரி, தேனி.எஸ்.மாரியப்பன் என்று பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாகியிருக்கின்றனர். இந்தப் பட்டியல் சற்று நீளமானது என்று கூட சொல்லலாம்.



முக்கிய ஆறுகள்: பெரியாறு, மஞ்சளாறு, வைகை, மற்றும் சண்முகாநதி.

அணைக்கட்டுகள்: சேலயாம்பட்டி, சத்திரப்பட்டி, உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, கோட்டூர், குச்சானூர்.

குறிப்பிட்டதக்க இடங்கள்

கும்பக்கரை அருவி: பெரிய குளத்தில் அருகே அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. கொடைக்கானலில்தோன்றி இங்கு அருவியாகப் பொழிகிறது.

குச்சனூர் சனீஸ்வரர் கோவில்: இங்குள்ள மூலவர் சுயம்புவாக எழுந்தத்தாக்க் கூறப்பட்டுகிறது. கோவிலின் முன்புறம் சுரபி நதி ஓடுகிறது.

வீரபாண்டி: பதிநான்காம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் வீரபாண்டியனால் கட்டப்பட்ட கௌமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கொலு வீற்றிருக்கும் கௌமாரி அம்மனை வழிபட்டால் கண்நோய் தீரும் என்பது நம்பிக்கை.

பெரியகுளம்: மாவட்டத்தின் முக்கிய தொழில் மையம். கொடைக்கானின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரமே, சேலத்துக்கு அடுத்து மாம்பழம் அதிகமாக விளையும் பகுதி.

வைகை அணை: தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தலம். ஆண்டிப்பட்டி அருகே முல்லையாற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

சருளி அபுபக்கர் மஸ்தான் தர்கா: 1630 களில் வாழ்ந்த இஸ்லாமியச் சித்தர் அபுப்பக்கர் ம ஸ்தானின்
சமாதியிடம்.

மேக மலை: கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தேயிலை, ஏலக்காய் விவசாயம் குறிப்பிடத்தக்கது.

பிற முக்கிய இடங்கள்: மாவாத்து வேலப்பர் கோவில், போடி மொட்டு, டாப் ஸ்டேசன், இராயப்பன்பட்டி பனிமகிமை மாதா தேவாலயம், கம்பம் வாவர் பள்ளிவாசல்.

முக்கிய விழாக்கள்: ஸ்ரீ மாவூத்து வெள்ளாளர் சித்திரைத் திருவிழா, ஆண்டிப்பட்டி (ஏப்ரல்): காமாட்சி அம்மன் மகா சிவராத்திரி திருநாள், தேவதானப்பட்டி (மார்ச்)த கௌமாரியம்மன் திருவிழா, வீரபாண்டி (மே), சனீஸ்வரன் ஆடித்திருவிழா, குச்சனூர் (ஜூலை/ஆகஸ்ட்) ; வேலப்பர் திருவிழா, சுருளி (மே) ; பரமசிவம் கோவில் திருவிழா, போடிநாயக்கனூர் (ஏப்ரல்).
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்
o  சென்னையிலிருந்து 484 கி.மீ. தொலைவு 
o  கடல்மட்டத்திலிருந்து 295 அடி உயரம். 
o  மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி நாயக்கனூர் ஏலக்காய், மாம்பழம், காப்பி வாணிப மையம். 
o  புகழ்பெற்ற கண்ணகி கோவிலின் கிருப்பிடம். இங்கு சித்ரா பௌர்ணமி தினத்தில் மட்டுமே திருநடை திறக்கப்படுகிறது. 
o  பருத்தி நூற்பாலைகள், சர்க்கரை ஆலைகள் முக்கிய ஆலைகள் 
o  பெரியார், சுருளாயர் தீர்மின் திட்டங்கள் மற்றும் வகைகை மைக்ரோ நீர்மின் நிலையங்கள். 

*****

http://www.thangampalani.com/2011/11/blog-post_5042.html
மற்றும்
விக்கிபீடியா

No comments:

Post a Comment