Pages

Saturday 14 September 2013

தேனி வரலாறு


வரலாறு
 

தேனி மாவட்டம் மதுரையில் இருந்து 1996ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பிரிக்கப்பட்டது. பின்னர் உத்தமபாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகியவை தாலுகாக்களாக பிரிக்கப்பட்டன.

அமைவிடம் : தேனிக்கு, வடக்கே திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கே மதுரை மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகரும், மேற்கே கேரளாவும் உள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும் மேகமலை போன்ற சிறிய சிறிய மலைகளும் உள்ளன. இந்த மலை தொடர் வடக்கிலிருந்து தெற்காக கேரள மாநிலத்தில் இருந்து தேனியை பிரிப்பது போல அமைந்துள்ளது. தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம், கூடலூர், சின்னமனூர், ஆண்டிபட்டி போன்ற முக்கிய ஊர்கள் மற்றும் பல கிராமங்களும் தேனி மாவட்டத்தில் உள்ளன.

காலநிலை : மிதமான வெப்பநிலை நிலவுகிறது. குறைந்த பட்சமாக 25 டிகிரியும், அதிகபட்சமாக 39.5 டிகிரி வெப்பநிலையும் நிலவுகிறது. மலைப்பகுதியில் 5 டிகிரி முதல் 25 டிகிரி வரை வெப்பம் உள்ளது. மலைகள், ஏரிகள் சூழ்ந்த பகுதியாக உள்ளதால் நல்ல காலநிலை நிலவுகிறது.

பொருளாதாரம் : இங்குள்ள மக்கள் பெரிதும் விவசாயத்தையே நம்பியுள்ளனர். பட்டு, பருத்தி, அரிசி, தேங்காய், தேயிலை, காப்பி, திராட்சை, ஏலக்காய் மற்றும் மாம்பழம் போன்றவை இங்கு விளைகின்றன. கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை உற்பத்திக்கு முக்கியமான பகுதியாகும். 4000 குறு விவசாயிகள் 90 ஆயிரம் டன் மஸ்கட் திராட்சையை உற்பத்தி செய்கின்றனர். 10 ஆயிரம் டன் தாம்சன் விதையில்லா திராட்சையும் உற்பத்தி செய்யப்படுகிறது. போடி நாயக்கனூர் ஏலக்காய், காப்பி, தேயிலை, மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. ஏலக்காய் இங்கு அதிகம் விளைவதால் இந்த ஊரை ஏலக்காய் நகரம் என மக்கள் அழைக்கின்றனர். ஏலக்காய் ஏலம் விடும் மையமும் இங்கு உள்ளது.

கலாசாரம் : பெரும்பாலும் இந்து மக்களே இங்கு உள்ளனர். வீரபாண்டி கோயில் திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். வீரப்ப அய்யனார் கோயில், தேவதானபட்டி காமாட்சி அம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வரர்கோயில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்

No comments:

Post a Comment