Pages

Friday 13 September 2013

பாண்டிய நாடு



இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக்
கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும்
தலைநகராக தென்மதுரையும் விளங்கியது.
பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய
இத்தென்மதுரை கடற்கோளினால்
அழிவுற்றது.இக்கடற்கோளில்
அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின்
தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம்
கடற்கோளால் அந்நாடும்
அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள
மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று.

பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம்
வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
பாண்டியரின் தோற்றம்
சேர, சோழர்கள் போன்ற பேரரசுக்களைக்
காட்டிலும் மூத்த குடியினர்
பாண்டியரே ஆவர். இவர்களின் தோற்றம் கூற
முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக்
கருதப்படுகின்றது. குமரிக் கண்டத்தில் தோன்றிய
ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக
உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக
நிலவும் கருத்து.

பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 1000
ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும்
தொல்காப்பியத்தில் கூறியபடி
“ "முன்னீர் விழவின் நெடியோன்
நன்னீர் மணலினும் பலவே"
அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர்
பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல் வரிகள். மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது.



Source : Unknown via Facebook.

No comments:

Post a Comment